ETV Bharat / city

அரசு மருத்துவமனைகளில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் - மதுரை எய்ம்ஸ் பணி விரைவில் தொடங்கும்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்டதன் எதிரொலியாக, இளம் சிசுக்கள் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

meet
meet
author img

By

Published : Jul 7, 2022, 10:05 PM IST

கோவை: குரும்பபாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் மதுக்கரை வட்டாரத்தில் வரும்முன் காப்போம் திட்ட முகாமை தொடங்கி வைத்தார்.

அப்போது விழாவில் பேசிய அவர், "வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு ஆயிரத்து 260 முகாம்கள் நடத்தப்பட்டு, 9 லட்சத்து 4 ஆயிரத்து 500 பேர் பயன்பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 461 முகாம்கள் நடத்தப்பட்டு, 4 லட்சத்து 29 ஆயிரத்து 49 பேர் பலன் அடைத்துள்ளனர். காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "டிஜிட்டல் எக்ஸ்ரேவுடன் கூடிய வாகனம் ஒன்று கோவைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காசநோயை துவக்க நிலையில் கண்டறிய முடியும். இனிமேல் தமிழ்நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு வருமுன் காப்போம் திட்ட முகாமிலும், கண்புரை நோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும், கண்புரை நோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுவது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

தமிழகத்தில் ஆயிரத்து 700 மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டம் செயல்பட்டு வருகின்றது. ஆயிரத்து 90 நோய்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கோவையில் காப்பீட்டு திட்ட அட்டை வாங்க கூடுதலாக புதியதாக ஒரு மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிசிடிவி கேமரா பொருத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஒருங்கிணைந்த இளம் சிசுக்கள் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் 95 சதவீதம் பேர் வீட்டில் இருந்து சிகிச்சை பெறுகின்றனர். 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். கடந்த 3 மாதங்களில் கரோனாவால் இரு இறப்புகள் மட்டுமே இருந்தது. அதுவும் இணை நோய்கள் காரணமாக ஏற்பட்டுள்ளது. எந்த வகையில் அறிகுறி இருந்தாலும் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.

இரண்டாவது தவணை தடுப்பூசிக்கான கால அவகாசத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைக்கு வருவதால், கரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பில்லை. சிறு, குறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3ஆவது தவணை தடுப்பூசி போட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்த வரை 50 மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு கட்டடங்கள் கட்டுவதற்கான டிசைன் தயார் செய்யப்பட்டு வருகிறது. அது தயாரானதும் புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கும். இதற்கு 6 மாதத்திற்கு மேலாகும். இதுவே முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த அழுத்தம் காரணமாகவே நடந்துள்ளது. கோவைக்கும் ஒரு புதிய எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்பதை டெல்லி செல்லும்போது வலியுறுத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தனியார் பள்ளி வாகனங்களில் இது நம்ம சென்னை, நம்ம செஸ் ஸ்டிக்கர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.