கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியிலுள்ள கனரா வங்கியில் நேற்று துப்பாக்கி, கத்தி ஆகியவற்றுடன் நுழைந்து ஊழியர்கள் மீது வெற்றிவேலன் என்பவர் தாக்குதல் நடத்தியுள்ளார். கனரா வங்கியில் கடன் கொடுக்க மறுத்ததால் ஆவேசமடைந்து இந்த வெறிச்செயலில் வெற்றி வேலன் ஈடுப்பட்டிருக்கிறார்.
இடைத்தரகர் குணபாலன் என்பவர் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, மூன்று லட்ச ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு கடன் பெற்றுத் தராமல் ஏமாற்றியதாகத் தெரிகிறது. இடைத்தரகர் குணபாலனும், கனரா வங்கியின் தலைமை மேலாளர் சந்திரசேகரும் பேசிக்கொண்டு இருந்த போது தான், அறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த வெற்றிவேலன், இடைத்தரகர், வங்கி மேலாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
''காவலன் செயலி''யை அனைவரிடமும் கொண்டு சேருங்கள்: டிஜிபி !
மேலும், இத்தாக்குதலில் சிலருக்கு காயம் ஏற்ப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் வங்கி மேலாளர் சந்திரசேகர் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில் வெற்றிவேலனை கைதுசெய்த காவல் துறையினர், கொலைமிரட்டல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.