ETV Bharat / city

குளத்தில் மிதந்த ஆண் உடல் மீட்பு - காவல் துறை விசாரணை - குளம்

கோயம்புத்தூர்: சிங்காநல்லூர் அருகே பெரியகுளத்தில் ஆகாயத் தாமரை புதரின் நடுவில் கிடந்த ஆண் சடலம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Male body floated in the pool in Coimbatore distric

author img

By

Published : Aug 30, 2020, 9:29 PM IST

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் குளத்தேறி பகுதியில் உள்ள பெரியகுளத்தில் ஆகாயத் தாமரை புதரின் நடுவில் ஆண் சடலம் கிடப்பதை பார்த்த அப்பகுதியினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் அங்கு சென்ற சிங்காநல்லூர் சட்டம்-ஒழுங்கு கிழக்கு உதவி ஆணையாளர் ஈஸ்வரன், காவல் ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமையிலான காவல் துறையினர் உடலை குளத்தில் இருந்து மீட்டனர்.

உடலில் எவ்வித காயமும் தென்படவில்லை. இறந்தவரை அடையாளம் காண முடியாததால், இது தற்கொலையா அல்லது குளத்தில் தவறி விழுந்து இறந்துவிட்டாரா என்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து உடலை கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.