கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இந்த நிலையில் தடாகம் பகுதியில் அம்மாவட்ட வட்டாட்சியர் மகேஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கணுவாய் பகுதியில் சட்டவிரோதமாக செம்மண் எடுத்துக் கொண்டிருந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து வீரபாண்டி பகுதியில் செம்மண் எடுத்துக் கொண்டிருந்த 2 லாரிகள் மற்றும் ஒரு ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கோவை வடக்கு வட்டாச்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
செம்மண் கடத்தலில் ஈடுபட்ட 4 லாரிகள் பறிமுதல்
கோவை: செம்மண் கடத்தலில் ஈடுபட்ட 4 லாரிகளை கோவை மாவட்ட வட்டாட்சியர் கையும் களவுமாக பிடித்தார்.