ETV Bharat / city

லாரியில் பற்றி எரிந்த தீ: பல லட்சம் மதிப்பிலான தென்னை நார் எரிந்து நாசம்! - பொள்ளாட்சி

கோவை: பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் தென்னை நார் ஏற்றிவந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால், பல லட்சம் மதிப்புள்ள தென்னைநார் மற்றும் லாரி முற்றிலும் எரிந்து நாசமாகின.

pollachi fire
author img

By

Published : Mar 19, 2019, 10:26 AM IST

பொள்ளாச்சி அருகே உள்ள ரெட்டியார்மடம் பகுதியில் செயல்பட்டுவரும் தென்னை நார் தொழிற்சாலையிலிருந்து தரம்வாய்ந்த தென்னை நார் பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கொச்சின் செல்வதற்காக பொள்ளாச்சி வால்பாறை சாலையில் வந்துகொண்டிருந்தது.

அப்போது ஆவல் சின்னம்பாளையம் என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக தென்னை நாரில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைக்கண்ட சாலையோரமிருந்த பொதுமக்கள் லாரியை நிறுத்துமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து லாரி ஓட்டுநர் ஓரமாக நிறுத்தியுள்ளார். இந்நிலையில் தீ மளமளவென பற்றி எரிந்ததால், லாரியும் அதிலிருந்த தென்ன நாரும் எரிந்து நாசமாகின.

இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர், முதற்கட்ட விசாரணையில், தென்னை நாரை உயரமாக லாரியில் ஏற்றிக்கொண்டு வந்த காரணத்தினால் மின்சார கம்பி உரசி தீ பிடித்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

பொள்ளாச்சி வால்பாறை சாலையில் தென்னை நார் ஏற்றிவந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு பல லட்சம் மதிப்புள்ள தென்னைநார் மற்றும் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது
பொள்ளாச்சி : மார்ச் : 19
பொள்ளாச்சி அருகே உள்ள ரெட்டியார்மடம் பகுதியில் செயல்பட்டு வரும் தென்னை நார் தொழிற்சாலையில் இருந்து ஏற்றுமதி தரம் வாய்ந்த தென்னை நார் பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று  கொச்சின் செல்வதற்காக பொள்ளாச்சி வால்பாறை சாலையில் வந்து கொண்டிருந்தது அப்போது ஆவல் சின்னம்பாளையம் என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக தென்னை நாரில்  தீப்பிடித்து எரிந்துள்ளது இதைக் கண்ட சாலையோரம் இருந்த பொதுமக்கள் லாரியை நிறுத்துமாறு கூறியுள்ளனர் கீழே இறங்கிய லாரி ஓட்டுநர் தென்னை நாருடன் சேர்ந்து லாரியும்  எரிந்துகொண்டிருந்தது கண்டு தப்பி ஓடினார் காற்று வேகமாக வீசியதால்  தீ மளமளவென வேகமாக விண்ணை முட்டுமளவு எரிந்து கொண்டிருந்தது இதனால் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே  வாகனங்களை நிறுத்தி விட்டனர்  பின்னர் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து இரண்டு மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள ஏற்றுமதி தரம் வாய்ந்த தென்னை நார் பொருட்கள் மற்றும் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது அளவுக்கு அதிகமாக தென்னை நாரை  உயரமாக லாரியில் ஏற்றிக்கொண்டு வந்த காரணத்தினால் மின்சார கம்பி உராய்ந்து தீ பிடித்திருக்கலாம்  என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர் சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக பொள்ளாச்சி வால்பாறை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.