கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "லேண்ட்லைன் தொலைபேசி இணைப்பு வைத்திருக்கும் வயதானவர்கள், ஓய்வூதியர்களை சில ஆசாமிகள் குறி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேங்க் மேனேஜர் போன்று பேசி ATM கார்டு முடங்க போவதாகவும், புதிய கார்டிற்கு கைப்பேசி எண், ATM கார்டு எண், OTP போன்ற விவரங்களை கேட்டறிந்து அவற்றைக்கொண்டு வங்கி கணக்குகளிலிருந்து பணம் திருடும் சம்பவம் அதிகரித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![லேண்ட்லைன் தொலைபேசி வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/02:43:43:1622798023_tn-cbe-03-landline-issue-photo-script-tn10027_04062021143102_0406f_1622797262_909.jpg)
![லேண்ட்லைன் தொலைபேசி வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/02:43:45:1622798025_tn-cbe-03-landline-issue-photo-script-tn10027_04062021143102_0406f_1622797262_547.jpg)
எனவே, வீட்டில் லேண்ட்லைன் வைத்திருக்கும் வயதானவர்கள், ஓய்வூதியர்கள் ATM, வங்கி கணக்கு, OTP போன்ற விவரங்களை போன் மூலம் கேட்டால் கூற வேண்டாம்" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.