கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் நடக்க உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கோயம்புத்தூர் வந்துள்ளார். இன்று (செப் 3), திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதனிடையே பொன்னர் சங்கர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு ஊர் மக்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
அதன்பின் செய்தியாளர்களை சந்திக்க வந்தார். அப்போது முரசொலியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து வெளியான கட்டுரை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் எல்.முருகன் பதில் அளிக்காமல் சென்றார்.
இதையும் படிங்க: “எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி படமும் இருக்கும்”