அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ. 110 கோடி மதிப்பில் 370 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதில் கோவை கோட்டத்தில் ஈரோட்டிற்கு 22 பேருந்துகள், ஊட்டிக்கு 13, திருப்பூருக்கு ஏழு, 40 சிவப்பு நிற நகர்புற பேருந்துகள் வழங்கப்பட்டன.
இதன் தொடக்க விழா கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டு 62 புதிய பேருந்துகளின் முதல் இயக்கத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
மேலும் படிக்க : நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கு: ”தப்பிய மகன், சிக்கிய தந்தை”