கோவை மாவட்டம் தடாகம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செங்கல் சூளைகளுக்காக அதிகளவில் மண் எடுக்கப்பட்டு வருகின்றன. இதை தடுக்க வேண்டும் எனக்கோரி விவசாயிகள் பல முறை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் கோரிக்கை விடுத்தும்; இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று மீண்டும் மனு அளித்துள்ளனர். அதன் பின் அது குறித்து அச்சங்க மாநிலத்தலைவர் வேணுகோபால் கூறியதாவது, ’செங்கல் சூளைகளுக்காக அதிக அளவில் மண் எடுப்பதைத் தடுக்க அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; தடுப்பணைகளால் யானை வழித்தடங்கள் பாதிப்பு என அனைத்து பாதிப்புகளையும் மீண்டும் அலுவலர்களிடம் விளக்கியுள்ளோம். மண் எடுப்பதை தடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்' என்றார்.
மேலும் படிக்க
இறந்து பிறந்த யானைக்குட்டி: பாசப்போராட்டம் நடத்தும் யானைக்கூட்டம்
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு