ETV Bharat / city

ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு: சலையில் பரிதவிக்கும் பொதுமக்கள்! - கோவை மாநகராட்சி

கோவை: கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை, மாநகராட்சி இடித்ததால் அப்பகுதியினர் அலுவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பதற்றம் நிலவியது.

சலையில் தஞ்சமடைந்த பொதுமக்கள்
author img

By

Published : Jul 24, 2019, 11:25 AM IST

கோவை கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள 123 வீடுகளுக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் ஒதுக்கி, அவர்களை கீரணத்தம் பகுதிக்கு குடியேறுமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது, ஆனால் அங்கு செல்ல மறுத்த மக்கள் ஜீவா நகரிலேயே வசித்து வந்துள்ளனர்.

மேலும் மாநகராட்சி நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஜீவா நகர் மக்கள் வழக்கு தொடுத்திருந்த நிலையில் நேற்று காலை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி மாநகராட்சி அலுவலர்கள் திடீரென்று ஐந்து பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு வந்து 15 வீடுகளை இடித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு: சலையில் தஞ்சமடைந்த பொதுமக்கள்

மேற்படி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதின் நகலை பொதுமக்கள், மாநகராட்சி அலுவலர்களிடம் காட்டியதைத் தொடர்ந்து வீடுகளை இடிக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. வீடுகளை இழந்த ஆதங்கத்தில் மக்கள் மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

Intro:குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்...

Body:கோவை கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள 123 வீடுகள் சேர்ந்தவர்களுக்கு கீரணத்தம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் குடியிருப்புகள் ஒதுக்கி அவர்களை அங்கு குடியேறுமாறு மாநகராட்சி அறிவுறுத்தியது ஆனால் கீரணத்தம் பகுதிக்கு செல்ல மறுத்த ஜீவா நகர் பகுதி மக்கள் அங்கேயே வசித்து வருகின்றனர் மேலும் மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜீவா நகர் பகுதி மக்கள் வழக்கு தொடுத்துள்ளனர் இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் 5 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்த வீடுகளை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் அதற்குள் பொது மக்கள் எதிர்ப்பை மீறி ஆக்கிரமிப்பில் உள்ள 15 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்தனர். இந்நிலையில் பொதுமக்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது அதற்கான நகலை பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் காட்டியதைத் தொடர்ந்து வீடு களை எடுக்கும் பணி மாநகராட்சி அதிகாரிகள் கைவிட்டனர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்குச் செல்ல விருப்பம் இல்லை என தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அமைச்சர் வேலுமணி ஆகியோரை சந்தித்து முறையிட்டுள்ளதாகவும் அவர்கள் பார்த்துக் கொள்வதாகக் கூறியிருந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி வீடுகளை இடித்துத் தள்ளி விட்டு சென்றதாக தெரிவித்தனர் தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படுகின்றது என்று சொன்னவுடன் வீடுகளை இடிப்பதை மாநகராட்சி அதிகாரிகள் நிறுத்திவிட்டதாகவும் வ வீடுகளை இழந்தவர்கள் இனி என்ன செய்ய முடியும் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர் மாநகராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.