ஈஷா யோகா மையத்தின் சார்பில் நடைபெற்ற மாட்டுப்பொங்கல் விழாவில் நாட்டு மாடுகள் கண்காட்சி நடைபெற்றது. இவ்விழாவில் ஈஷாவின் தன்னார்வலர்கள், கிராம மக்கள், பிற மாநில மக்கள், வெளிநாட்டினர் என பல தரப்பினர் கலந்துகொண்டு மண்பானையில் தமிழ் கலாசாரப்படி பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.
அன்பின் கண்காட்சியில் வைக்கப்பட்ட நாட்டு மாடுகளுக்குப் பொங்கல், கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன. இந்தக் கண்காட்சியில் வெளிநாட்டவரும் பிற மாநிலத்தவரும் பொங்கலிடுவதை மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளைகள் 26 பேர் காயம்!
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஈஷா யோகா மையத்தின் உறுப்பினர், ஈஷாவில் மாட்டுப்பொங்கல் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது என்றும் இதில் 20 வகையான நாட்டு மாடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார். இதில் காங்கேயம், ஓங்கோல், ரதி உட்பட 20 வகையான நாட்டு மாட்டு இனங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வானது தங்களுக்கு ஒரு புது வித மகிழ்ச்சியை தருவதாக கூறிய வெளிநாட்டவர்கள், இங்கு கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையானது தமிழர் கலாசாரத்தை மிகவும் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது என்றும் தெரிவித்தனர்.