ETV Bharat / city

'தமிழ்நாட்டின் முதலீடுகள் அதிகளவில் வரவேற்கப்படுகின்றன' - பப்புவா நியூ கினியா மாகாண ஆளுநர் தகவல்

Business Investment: தமிழ்நாட்டிலிருந்து அதிக அளவில் தொழில் முதலீடுகள் வரவேற்கப்படுவதாக, கோவைக்கு ஒருநாள் பயணம் மேற்கொண்ட பப்புவா நியூ கினியா நாட்டின் மேற்கு நியூ பிரிட்டன் மாகாண ஆளுநர் சசிந்திரன் முத்துவேல் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் சசிந்திரன்
ஆளுநர் சசிந்திரன்
author img

By

Published : Mar 7, 2022, 10:24 PM IST

கோவை: Business Investment: பசிபிக் கடல்பகுதியின் தென்மேற்கில் பப்புவா நியூ கினியா நாடு உள்ளது. மார்ச் 7ஆம் தேதியான இன்று பப்புவா நியூ கினியா நாட்டின் மேற்கு நியூ பிரிட்டன் மாகாண ஆளுநர் சசிந்திரன் முத்துவேல், ஒரு நாள் பயணமாக கோவைக்கு வருகை தந்தார்.

அவர் வடவள்ளி பகுதியிலுள்ள அந்நாட்டிற்கான இந்திய உயர்மட்ட ஆணையர் விஷ்ணு பிரபு வீட்டில் கோவை மாவட்ட தொழில் அமைப்பினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது தொழில் அமைப்பினர்கள், அந்நாட்டில் முதலீடு செய்வது தொடர்பாகப் பல்வேறு விளக்கங்களைக் கேட்டறிந்தனர்.

தொழில் முதலீடுகள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தங்கள் நாட்டில் 95% நிலங்கள் பொதுமக்கள் வசம் இருக்கிறது. 5% நிலம் மட்டுமே அரசின் வசம் இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து அதிக அளவில் தொழில் முதலீடுகளை தாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்கள் நாட்டில் கல்வி, மருத்துவம் மற்றும் சிறு குறு தொழில்களில் அதிக அளவிலான முதலீடுகள் செய்யலாம். தற்போது எங்களது நாட்டில் தரமான கல்வி என்பது குறைவாகவே உள்ளது; ஆனால், திறமையான இளைஞர்கள் அதிகம் உள்ளனர்.

கோவையில் வர்த்தக மையம்

வருகிற ஏப்ரல் மாதத்தில், சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சருடன் தொழில் முதலீடுகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறோம். அப்போது எங்களது நாட்டில் உள்ள வாய்ப்புகள் குறித்த அரங்குகள் அமைக்க இருக்கிறோம்.

மேற்கு நியூ பிரிட்டன் மாகாண ஆளுநர் சசிந்திரன் பேட்டி

மேலும், கோவையின் துடியலூர் பகுதியில், பப்புவா நியூ கினியா நாட்டின் வர்த்தக மையம் அமைக்க உள்ளோம். ஏற்கெனவே, எங்களது நாட்டில் ஆஸ்திரேலியா அதிக தொழில் முதலீடுகளை செய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, சிறு குறு தொழில்களில் சீனா அதிகளவிலான முதலீடுகள் செய்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை முதலீடு என்பது குறைந்தளவே உள்ளது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மகளிர் முன்னேற்றத்திற்கு நமது 'திராவிட மாடல் அரசு' என்றும் துணை நிற்கும் - ஸ்டாலின் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.