கோயம்புத்தூர்: தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 25ஆம் தேதி அன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையடுத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்தின் உத்தரவின்பேரில், பொள்ளாச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்மணி தலைமையில், பொள்ளாச்சி சரகத்திற்குள்பட்ட பெண் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமைக் காவலர்கள், காவலர்கள் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு, பொள்ளாச்சி கோவை சாலை மாகாலிங்கபுரம் வளைவில் பேரணி தொடங்கி பொள்ளாச்சி அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடத்தினர்.
இந்நிலையில், காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்மணி கூறுகையில், ‘பொள்ளாச்சி உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், பெண் காவலர்கள் என இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். நவம்பர் 25 ஒவ்வொரு வருடமும் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
மேலும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக இந்தப் பேரணி நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும்விதமாகக் காவல் நிலையங்களில் தெரிவிப்பதற்குத் தனி பெண் காவலர்கள் உள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:Farm Laws: ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சீக்கிய விவசாயிகள்!