ETV Bharat / city

பெண்ணிடம் தவறாகப் பேசிய டிஎஸ்பியின் வாகன ஓட்டுநர் பணியிடை நீக்கம்! - கோவையில் பெண்ணிடம் தவறாக பேசிய காவலரின் ஓட்டுநர் பணிநீக்கம்

கோவை: மதுபோதையில் பெண்ணை இருசக்கர வாகனத்தில் துரத்திச்சென்று ஆபாசமாகப் பேசிய காவல் துணை கண்காணிப்பாளரின் ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காவலரின் ஓட்டுநர் பணிநீக்கம்
author img

By

Published : Sep 11, 2019, 10:54 AM IST

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வன்னியன் கோயில் பகுதியில் இரும்பு பட்டறை நடத்திவருபவர் ரவிக்குமார் (38). அவரது மனைவி சரண்யா (35) நேற்று மதியம் கீரணத்தம் பகுதியில் உள்ள தனது உறவினர்களைப் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது அத்திப்பாளையம் அடுத்துள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றபோது காவலர் சீருடையில் ஒருவர் அவரைப் பின்தொடர்ந்து வந்து தவறாகப் பேசியுள்ளார்.

இதனால் சரண்யா தன் கணவர் ரவிக்குமாருக்கு செல்ஃபோன் மூலம் தகவல் கொடுத்ததையடுத்து பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து ரவிக்குமார், அவரது நண்பர்கள் அத்திப்பாளையம் பகுதிக்கு வந்து அந்த நபரை கோவில்பாளையம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பெண்ணிடம் தவறாகப் பேசிய துணை கண்காணிப்பாளரின் ஓட்டுநர்

அங்கு அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர் பெயர் பிரபாகரன் என்பதும், அவர் பெரியநாயக்கன்பாளைய காவல் துணை கண்காணிப்பாளரின் ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து பெண்ணிடம் தவறாகப் பேசிய குற்றத்திற்காக அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Intro:கோவையில் குடிபோதையில் பெண்ணை இருசக்கர வாகனத்தில் துரத்திச்சென்று ஆபாசமாக பேசிய காவலர் சஸ்பெண்ட்Body:கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம்வன்னியன் கோவில் பகுதியில் லேத் வொர்க் ஷாப் நடத்தி வருபவர் ரவிக்குமார். இவரது மனைவி சரண்யா. செவ்வாய்க்கிழமை மதியம் கீரணத்தம் பகுதியில் உள்ள தனது உறவினர்களை பார்க்க இருசக்கர வாகனத்தில் வந்தபோது, அத்திப்பாளையம் பகுதியை அடுத்துள்ள டாஸ்மாக் கடை அருகில் இருந்து போலீஸ் உடை அணிந்த நபர் பின்தொடர்ந்துள்ளார். காவலர் ஒருவர் பின்தொடர்ந்து வருவதை கண்டு பயந்த சரண்யா வேகமாக செல்ல முயலும் போது, அவரை முந்திச் சென்று காவலர் வழிமறித்துள்ளார். பின் எங்கே செல்கிறீர்கள் என விசாரித்த அவர் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், உங்கள் கண் அழகாக இருக்கிறது மற்றும் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகின்னது.

சரண்யா தான் கீரணத்தம் செல்வதாகவும் அங்கு உறவினர்களை பார்க்க சென்று கொண்டிருப்பதாகவும் காவலரிடம் கூறி விட்டு வேகமாக தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.ஆனால் காவலரும் விடாமல் அந்த சரண்யாவை பின் தொடர்ந்துள்ளார்.
இதனால் பீதியடைந்த சரண்யா , அத்திப்பாளையம் பகுதியிலுள்ள ஒரு பேன்சி ஸ்டோரில் சென்று அமர்ந்து கொண்டு தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். அங்கும் சென்ற காவலர் தகாத வார்த்தையில் சரண்யாவிடம் பேசியதாக கூறப்படுகின்றது.இதனிடையே பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த ரவிக்குமார் , அத்திப்பாளையம் பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து காவலரை சுற்றிவளைத்தனர். பொது மக்கள் ஓன்று கூடியதை பார்த்த காவலர் அருகில் இருந்த கடைக்குள் சென்று அமர்ந்து கொண்டார். ஆனால் பொது மக்கள் காவலரை பிடித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் விசாரணை மேற்கொண்ட போது காவலரின் பெயர் பிரபாகர் என்பதும், அவர் குடிபோதையில் இருப்பதும் இருப்பதும் தெரியவந்தது. மேலும் பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பியின் ஜீப் டிரைவராக தற்போது காவலர் பிரபாகர் பணியில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் பிரபாகரனின் இரு சக்கர வாகனத்தில் இருந்து மதுபாட்டில்களும் கைப்பற்றப்பட்டது.

இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் சரண்யா , தனக்கு ஏற்பட்ட அத்துமீறல் மற்றும் சீண்டல் குறித்து கோவில்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து உடனடியாக கோவில்பாளையம் காவல் துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் உடனடியாக காவலர் பிரபாகரனை பணியிடைநீக்கம் செய்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்திரவிட்டார். மேலும் சரண்யா கொடுத்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் காவலர் பிரபாகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்...Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.