கோவை விமான நிலையத்தில் ஜுனட் யூசப் ஷேக், அஸிம் சஜீத் குரேஷி ஆகிய இரண்டு பயணிகள் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் கோவை வந்தடைந்தனர்.
அவர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வருவதாக டி.ஆர்.ஐ அலுவலர்களுக்கு துப்பு கிடைத்துள்ளது. அதன்படி, அலுவலர்கள் அவர்களை சோதனை செய்ததில் அந்த பயணிகளிடமிருந்து மறைத்து பொட்டலம் வடிவில் வைக்கப்பட்டிருந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அந்த இரண்டு பயணிகளும் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை ஆயிரத்து 420 கிராம் என்றும், அதன் மதிப்பு சுமார் 56 லட்சத்து 94 ஆயிரத்து 200 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னைக்கு கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்!