ETV Bharat / city

முப்படைத் தளபதி மரணம் குறித்து அவதூறு: கோவையைச் சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு - நான் தான் பாலா அட்மின் கைது

முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் அவதூறாகப் பதிவிட்ட நபர் மீது கோவை சரவணம்பட்டி காவல் துறையினர் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முப்படைத் தளபதி மரணம்
முப்படைத் தளபதி மரணம்
author img

By

Published : Dec 16, 2021, 12:21 PM IST

Updated : Dec 16, 2021, 12:27 PM IST

கோவை: முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தது குறித்து ஃபேஸ்புக் தளத்தில் 'நான் தான் கோவை பாலா' என்ற பக்கத்தில் அவதூறான கருத்துகளை பதிவிட்ட நபர் மீது கோவை சரவணம்பட்டி காவல் துறையினர் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த 8ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வருண்சிங் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

பிபின் ராவத் மரணம் குறித்து அவதூறு

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் ஒரு வார காலத்திற்கு பின் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஹெலிகாப்டரில் பயணித்த14 பேருமே இறந்தது இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையிலான விசாரணை குழுவினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் இது குறித்து குன்னூர் காவல் துறையினரும் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையே ஹெலிகாப்டர் விபத்து குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான, சர்ச்சைக்குரிய பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வந்தன. இதையடுத்து இந்திய விமான படை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை நடந்துவருவதாகவும், விரைவில் உண்மைகள் வெளியிடப்படும் என்றும், அதுவரை உயிரிழந்த ராணுவ அலுவலர்களின் கண்ணியத்தைக் கருத்தில்கொண்டு யூகங்களைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறியிருந்தது.

வைரலான அவதூறு: எழுந்த கடும் கண்டனங்கள்

மேலும் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு காவல் துறையினரும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த 'நான் தான் கோவை பாலா' என்ற ஃபேஸ்புக் தளத்தில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஃபேஸ்புக் தளத்தில் முப்படைத் தலைமைத் தளபதி இறந்தது குறித்து, பிரதமர் நரேந்திர மோடியை அதனுடன் தொடர்புபடுத்தி செய்தி, கார்ட்டூன் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தகவலானது தற்போது ஃபேஸ்புக்கில் வைரலாகியது.

இந்தக் கருத்துக்கு பாஜக, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்ததோடு, சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அமைதியைச் சீர்குலைக்கத் தூண்டுதல்

இதையடுத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துகளைத் தெரிவித்த 'நான் தான் பாலா' என்ற ஃபேஸ்புக் கணக்கிற்குச் சொந்தக்காரரான கோவை பாலன் மீது சரவணம்பட்டி காவல் துறையினர் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

சாதி, மதம், இனம், மொழி சம்பந்தமாக விரோத உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் நோக்கில் பதிவிடுதல், அமைதியைக் சீர்குலைக்கத் தூண்டுதல், இரு வேறு வகுப்புகளுக்கிடையே தீய எண்ணத்தை உருவாக்கும் உரைகளை வெளியிட்டது என மூன்று பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இது தொடர்பாக சரவணம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: முப்படைத் தளபதிகள் குழுத் தலைவரானார் நரவணே

Last Updated : Dec 16, 2021, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.