ETV Bharat / city

கோவை மாவட்ட பி.எஃப்.ஐ அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு... - Coimbatore Commissioner of Police

பிஎஃப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்ட பி.எஃப்.ஐ அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 28, 2022, 2:33 PM IST

கோயம்புத்தூர்: இந்தியா முழுவதும் கடந்த வாரம் பிஎஃப்ஐ (பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா) அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், தமிழகத்திலிருந்து 11 பேரையும் இந்தியா முழுவதும் 247 பேரையும் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

இதனால், கோவை முழுவதும் பதற்றம் நீடித்தது. இதனிடையே, பி.எஃப்.ஐ அமைப்புக்கும், அதன் துணை அமைப்புகளுக்கும் மத்திய அரசு5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

பி.எஃப்.ஐ அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில், கோவையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டவுன்ஹால், உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட கோவையின் முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்ட பி.எஃப்.ஐ அலுவலகத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்பு

இந்நிலையில், கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமை அலுவலகத்தில், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், கோவையின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பு அலுவலகங்கள் மீதும், வாகனங்கள் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில், பிஎஃப்ஐ பொறுப்பாளர் ஒருவருக்கு தொடர்பிருப்பதாக அண்மையில் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாஅமைப்புக்கு தடை எதிரொலி... நெல்லை மேலப்பாளையத்தில் போலீசார் குவிப்பு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.