ETV Bharat / city

Document Writer Welfare Finance Commission: ஆவண எழுத்தாளர் நல நிதி ஆணையம் உருவாக்கி அரசாணை வெளியீடு

Document Writer Welfare Finance Commission: ஆவண எழுத்தாளர் நல நிதி ஆணையம் உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது.

tamilnadu government create registration officers fund  Accident death 1lakh fund  ஆவண எழுத்தாளர் நல நிதி ஆணையம்  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு  ஆவண எழுத்தர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் ரூபாய் ஒரு லட்சம்
தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
author img

By

Published : Dec 28, 2021, 4:47 PM IST

சென்னை: Document Writer Welfare Finance Commission: பதிவுத்துறை சார்ந்து பணியாற்றிவரும் ஆவண எழுத்தாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பயன்படும் விதமாக ஆவண எழுத்தர் நிதியத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பதிவுத்துறையில் ஆவண எழுத்தர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் ரூபாய் ஒரு லட்சமும், இயற்கையாக மரணம் அடைந்தால் ரூபாய் 20 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

சட்டப்பேரவை மானியக்கோரிக்கை விவாதத்தின் போது பதிவுத்துறையில் ஆவண எழுத்தாளர்களுக்கு எனத் தனி நல நிதியம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதைச் செயல்படுத்தும் விதமாக நல நிதி ஆணையம் உருவாக்கப்பட்டு உள்ளது.

5600 ஆவண எழுத்தாளர்களிடம் இருந்து மாத சந்தாவாக ₹1,000 வீதம் ₹56 லட்சம் திரட்டி பற்றாக்குறை தொகை 9.88 அரசு மானியத்துடன் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான உத்தரவு உடனே நடைமுறைக்கு வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:இந்தியாவில் மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.