கோவை: பொள்ளாச்சி அருகே ஆனைமலை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வால்பாறை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீனாட்சிபுரம் ரோடு வழியாக கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை ஏற்றி வந்த வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அந்த வாகனத்தில் இருந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் சதீஷ்(22), சத்யா (21), செந்தில்(43) அருள்குமார்(36) ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ்(21)ஆகிய 5 பேர் செய்யப்பட்டனர். அவர்கள் விற்பனைக்கு கடத்தி வந்த சுமார் ரூ.10,00,000 மதிப்புள்ள 2 டன் எடை கொண்ட குட்கா பொருட்கள் தவிர, ரூ.16,200 நான்கு சக்கர வாகனம் 2 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, துணை கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன் கூறுகையில் இந்த வழக்கில் 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளோம். இது போன்ற சமூக விரோத செயல்களை தடுக்கவே, இரவு பகலாக சுழற்சி முறையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவில் இருந்து தப்பியோடிய 12 பேருக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் வழங்க இன்டர்போல் மறுப்பு