தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அச்சங்க தலைவர் ஜே.சி.ரத்தனசாமி பேசுகையில், "விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை தமிழ்நாடு அரசு சட்டசபையை கூட்டி உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு மத்திய அரசிற்கு நெருக்கடி கொடுத்து விவசாயிகளுக்கென தற்போது நிறைவேற்றப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசு உலகமயமாக்கல் என்று கூறிக் கொண்டு அனைத்தையும் தனியாருக்கு அளிக்கும் போக்கு கண்டிக்கத்தகது.
மின்சாரத்தை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். இதற்கென மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கத்தை தொடக்கி உள்ளோம்.
ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்களில் போராட்டம் நடத்தியுள்ளோம். ஆனால் கோவையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இதுபோன்று பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதற்கு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளோம்.
இதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்த தயாராக உள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்புப் பணி: மாவட்டங்களை நோக்கி விரையும் முதலமைச்சர்