கோயம்புத்தூர் மாநகர் பிஆர்எஸ் காவலர் குடியிருப்புகளில் தொடர்ச்சியாக நகை, பணம், லேப்டாப், செல்போன் உள்ளிட்டவை திருடப்பட்டு வந்தது. இதனால் மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் தனிப்படை அமைத்து குற்றவாளியை பிடிக்க உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் உதவி ஆணையாளர் வின்சென்ட் தலைமையில் தனிப்படை காவலர்கள் குற்றவாளியை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் காவலர் செந்தில் குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பின்வரும் தகவல்கள் தெரியவந்தன.
பணி நீக்கம்
செந்தில்குமார் 1993ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் காவலராக பணி அமர்ந்தார். இந்த பணியின்போது தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்தால் 2009ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார்.
வேலையும், பணமும் இல்லாத காரணத்தால் திருடுதல், சூதாடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டார். இதையடுத்து வெளி மாவட்டங்களுக்கு சென்று திருட்டு சம்பவங்களில் ஈடுபட தொடங்கினார். அப்படி கோயம்புத்தூர் மாநகர் பிஆர்எஸ் காவலர் குடியிருப்புகளில் திருடிய வழக்குகளில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: செல்ஃபோன் பறிப்பு - சிசிடிவி மூலம் சிக்கிய இளைஞர்கள்