கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயில் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் அவ்வப்போது யானைகள் நடமாட்டம் காணப்படும்.
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு சுவாமி தரிசனத்திற்காக ஏராளமானோர் படிக்கட்டுகள் வழியாக மலை ஏறிக் கொண்டிருந்தனர். அப்போது இடும்பன் கோயில் அருகே திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்க ஆரம்பித்தது.
இதனைக் கண்ட பக்தர்கள் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடினர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அடிவாரப் பகுதியில் இருந்த வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்து ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதையும் படிங்க:
முதல் முழு நீள சிங்கிள் ஷாட் படம்! - அசரவைக்கும் பார்த்திபன்