ETV Bharat / city

யானை தாக்குதல் - தப்பிய முதியவர்

கோவை அருகே யானை தாக்கியதில் காயம் அடைந்த முதியவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

யானை தாக்கி முதியவர் கால்களில் எலும்பு முறிவு

author img

By

Published : Jun 30, 2021, 7:07 PM IST

Updated : Jun 30, 2021, 8:01 PM IST

கோவை மாங்கரை அருகே உள்ள பெரிய தடாகம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (75). இவர் தோட்டத்தில் தனியாக வசித்து வருகிறார். இவரது மாந்தோப்பில் நேற்றிரவு (ஜூன் 29) ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்தது. அதனை பார்த்து சத்தம் போட்டவாறு யானையை நோக்கி சென்றுள்ளார். யானை அங்கிருந்து சென்றதையடுத்து அவர் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

வனத்துறையினரின் வலியுறுத்தல்

அப்போது மீண்டும் வந்த யானை திடீரென லட்சுமணனை துரத்திவந்து தும்பிக்கையால் தாக்கிவிட்டு காலில் மிதித்துள்ளது. இதில் அவரது இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்ட நிலையில் சத்தம் போட்டுள்ளார். இன்று (ஜூன் 30) காலை அந்த வழியாக சென்றவர்கள், யானை தாக்கியதில் இரு கால்களிலும் முறிவு ஏற்பட்ட நிலையில் இருந்த லட்சுமணன் குறித்து கோவை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு கால் முறிவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "தடாகம், மாங்கரை, பெரிய தடாகம் பகுதிகளில் தற்போது யானைகள் நடமாட்டம் உள்ளது. எனவே இரவில் அவசியமின்றி யாரும் வெளியே வரவேண்டாம். யானைகள் ஊருக்குள் வந்தால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தாங்களாகவே யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபடக்கூடாது" என வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: 'எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை: வட மாநில இளைஞருக்கு 4 நாள் போலீஸ் காவல்'

Last Updated : Jun 30, 2021, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.