கோயம்புத்தூர்: வால்பாறை அடுத்துள்ள தாயமுடி எஸ்டேட் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இவர்கள் நியாயவிலைக் கடை பொருள்களை வாங்குவதற்காக ஒரே ரேஷன் கடை தேயிலைத் தோட்டத்தின் மத்தியில் இயங்கிவருகிறது.
இந்நிலையில் நேற்று (நவ. 08) நள்ளிரவு இங்கு வந்த 12 காட்டு யானைகள் ரேஷன் கடை கதவுகள், ஜன்னல்கள், சுவரை இடித்து கடையில் உள்ள பொருள்களைத் தூக்கி வீசி சேதப்படுத்தியுள்ளன.
பின்னர், அங்கு சேதப்படுத்தும் சத்தம் கேட்டு மக்கள் கூச்சலிட்டுள்ளனர். மேலும் அரிசி, பருப்பு, எண்ணெய், இதர பொருள்களின் சேத மதிப்பு ரூபாய் 25 ஆயிரம் ஆகும். அப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனத் துறையினர் தெரிந்துமே அதனை கட்டுப்படுத்த முடியாமல் மெத்தனப் போக்கில் இருந்த காரணத்தினால் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் வருகின்றன என்று குடியிருப்புவாசிகள் கூறுகிறார்கள்.
இதனை அறிந்த தேயிலைத் தோட்ட இரவு காவலர் வனத் துறைக்குத் தெரிவித்துள்ளார். பின்னர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் யானை கூட்டத்தை காட்டுக்குள் விரட்டியடித்துள்ளனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் காய்கறி ஏற்றிவந்த லாரி விபத்து!