கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த பொன்னே கவுண்டன்புதூரில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகியவர்கள், திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று (ஜன.6) நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா தலைமைத் தாங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் பொது வாழ்வில் அப்படி எந்தவொரு தியாகமும் செய்யவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது தோழியான சசிகலாவின் காலை பிடித்து வளர்ந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி.
திடீரென விபத்து முதலமைச்சாராக பழனிசாமி பதவியேற்றார். அப்படிப்பட்ட பழனிசாமியை திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு போட்டியாக நிறுத்துவது என்பது ஒரு சிறுவனை கூட்டி வந்து போட்டியாக நிறுத்துவதற்கு சமமானது.
அதிமுக ஆட்சியில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லை. பொது மக்களுடைய பிரச்னைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. எனவே, இதற்கு தீர்வு கிடைக்க திமுக ஆட்சிக்கு வரவேண்டும். பல தியாகங்களை செய்த மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வரவேண்டும்” என்றார்.
முன்னதாக கணேசபுரத்தில் திமுக அன்னூர் தெற்கு ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையும் படிங்க : ’பட்டியல் இனத்தை இழிவுபடுத்துகிறார் அமைச்சர் வேலுமணி’