கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, நாளை டெல்டா பாசன விவசாயிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து நீரை திறக்க செல்கிறேன். நீலகிரி மாவட்டத்தில் கனமழை, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க துணை முதலமைச்சர் செல்கிறார்.
ஸ்டாலின் விளம்பரம் தேடுவதற்காக நீலகிரி சென்றார். ஆனால் நாங்கள் அப்படியல்ல, நீலகிரியில் மக்கள் பாதிக்கப்பட்ட அடுத்தநாளே வருவாய்த்துறை அமைச்சர் அங்கு சென்று துரிதமாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி ஒதுக்கி தேவையான வசதிகளை செய்தார்" என்று தெரிவித்தார்.
மேலும், காஷ்மீர் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, திமுக கூட்டணி மக்களுக்காக எந்த நல்லதும் செய்ததில்லை. நாட்டு மக்களுக்கு நல்ல திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. அதற்கு மாநில அரசு துணை நிற்கிறது என்று பதிலளித்தார்