கோவை: வீரபாண்டி பேரூராட்சியில் கடந்த 2001 முதல் 2016ஆம் ஆண்டு வரை அதிமுகவைச் சேர்ந்த கே.வி.என்.ஜெயராமன் தலைவராக இருந்தார். அவர் பணியிலிருந்த காலத்தில், வருமானத்தை விட அதிகமாக 1.45 கோடி சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது.
ஏராளமான சொத்து மற்றும் நகைகள் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக முன்னாள் பேரூராட்சி தலைவர் கே.வி.என்.ஜெயராமன் மற்றும் அவருடைய மனைவி கீர்த்தி ஆகிய இருவர் மீதும் கோவை லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, அவரது இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனையறிந்த அதிமுகவினர் ஒரு இல்லம் முன்பு குவிந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ICC women's Cricketer in 2021: ஸ்மிருதி மந்தனாவுக்கு ஐசிசி விருது!