ETV Bharat / city

கோவை வடவள்ளி சந்திரசேகர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு - விஜயபாஸ்கர்

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதப்படும் சந்திரசேகர் என்பவரது இல்லத்தில் இருந்து லேப்டாப் உள்ளிட்ட சில ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 13, 2022, 4:48 PM IST

கோவையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோரின் இல்லம் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள், உட்பட தமிழ்நாட்டில் 30-க்கும் மேலான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (செப்.13) சோதனை மேற்கொண்டனர்.

கோவை வடவள்ளி பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதப்படும் சந்திரசேகர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 4ஆவது முறையாக சோதனை மேற்கொண்டனர். அவரது இல்லத்தில் காலை 6:00 மணி முதல் 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை குழுவினர் சுமார் 9 மணி நேரமாக மேற்கொண்ட சோதனை நிறைவு பெற்றது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சில ஆவணங்கள், லேப்டாப் உள்ளிட்டவற்றை எடுத்துச்சென்றனர். இதனையடுத்து சந்திரசேகர் காரில் புறப்பட்டுச்சென்றார். இதனிடையே அவரது இல்லத்திற்கு அருகில் வடவள்ளி- தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள பட்டியண்ணன் நகர் பகுதியில் உள்ள அவருக்குச் சொந்தமான சி.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை வடவள்ளி சந்திரசேகர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு

இதையும் படிங்க: அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிசிடிவி பதிவுகள் சேகரிப்பு - சிபிசிஐடி பதில்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.