கோயம்புத்தூர்: உதயநிதி ஸ்டாலினின் 44ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆனைமலை நகர திமுக இளைஞரணியினர் கேக் வெட்டியும், உணவுப் பொட்டலங்கள் அளித்தும், பலநூறு மரக்கன்றுகள் வழங்கியும் கொண்டாடினர்.
இவ்விழாவில் ஒன்றியச் செயலாளர் தேவசேனாதிபதி, நகரப் பொறுப்பாளர் ஜாபர் அலி, சீனிவாசன் ராஜ்குமார், கோழிக்கடை அபு, கிருஷ்ணகுமார் பாலு மணி, இளைஞர் அணியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், நப்பீஸ், ஜாவித் ரியாஸ் மற்றும் திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: நீட் விலக்கு மசோதா: ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்