இதுகுறித்து, திமுக வழக்குரைஞர் கே.எம். தண்டபாணி அளித்த புகார் மனுவில், “கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பகுதி கழக பொருளாளர் சுரேஷ் பாபு என்பவரது முகநூல் பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாராளுமன்ற உறுப்பினரும், திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா ஆகியவர்களை பற்றி அவதூறு பரப்பும் வகையிலும், களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் செய்திகளை பகிர்ந்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
மேலும், 'கனிமொழியின் காதலன்' என்ற முகநூல் பக்கத்தில் திமுக தலைவர்கள் பற்றியும் அவதூறாக சில பதிவுகள் பதிவிட்டுள்ளனர்.
இதுபோன்ற பதிவுகள் திமுக கட்சியின் முன்னணி தலைவர்களின் நற்பெயரையும், புகழையும் களங்கப்படுத்தும். இது எந்த நேரத்திலும் பொது அமைதிக்கும், சட்ட ஒழுங்கிற்கும் பங்கம் ஏற்படுத்தும் சூழலை உருவாக்கும்.
எனவே, அதிமுகவைச் சேர்ந்த சுரேஷ்பாபு மற்றும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.