ETV Bharat / city

திமுக-பாஜக போஸ்டர் மோதல்... - Coimbatore East District DMK

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள நிலையில், கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுகவினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 14, 2022, 10:45 AM IST

கோயம்புத்தூர்: கரூரில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கேலி செய்யும் விதமாக பாஜகவினர் போஸ்டர் ஒட்டி இருந்தனர். அதில் "திருடர் குல திலகமே...ஊழலின் மறு உருவமே... அணிலுக்கு அடிச்ச ஜாக்பாட் 5,000 கோடிக்கு அதிபதியாக்கிய BGR ஊழல்" என்ற வாசகம் இருந்தது.

பின், தராசு தட்டில் ஒரு பக்கம் பணக்கட்டுகளும், மறுபக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமர்ந்திருப்பது போல் காட்சிபடுத்தி இருந்தனர். அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி பணத்தை விட பலமானவர் என்பதை போல், தராசு தட்டு அமைச்சருக்கு பக்கத்தில் சாய்ந்திருப்பது போன்று சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர்.

பாஜகாவை விமர்சித்து கரூர் திமுகவினர் ஒட்டிய போஸ்டர்

இந்நிலையில், கோவை கிழக்கு மாவட்ட திமுகவினர், கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் அண்ணாமலைக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்களில், "நோட்டா கிட்ட வச்சுக்கோ.... எங்க ஏட்டா கிட்ட வேண்டாம்..." என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் கோவை ரயில் நிலையம் கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மின் கட்டண உயர்வை திசை திருப்பவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.