ETV Bharat / city

சூடுபிடிக்கும் 'முகநூல்' மாட்டிறைச்சி விவகாரம்! ஒருவர் கைது

கோவை: மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முகநூலில் பதிவிட்ட திராவிடர் விடுதலை கழக நிர்வாகி நிர்மல் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

DK Nirmalkumar arrested
author img

By

Published : Jul 27, 2019, 6:24 PM IST

Updated : Jul 28, 2019, 8:25 AM IST

திராவிடர் விடுதலை கழகத்தின் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் நிர்மல்குமார். இவர் கடந்த 13ஆம் தேதி மாட்டிறைச்சி சாப்பிடுவது தொடர்பாகவும், இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை முகநூலில் பதிவிட்டார்.

இது குறித்து மணி என்பவர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல் துறையினர் நிர்மல் குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், முகநூலில் சர்ச்சை கருத்து பதிவிட்டது நிர்மல் குமார் என்பது தெரியவந்தது.

நிர்மல்குமார் பதிவு
நிர்மல்குமார் முகநூல் பதிவு

இதனையடுத்து, அவர் மீது இரு பிரிவினரிடையே விரோதம் ஏற்படுத்தும் விதமான கருத்துகளை பகிர்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர். அதன்பின் கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரபு முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

தொடர்ந்து, நிர்மல்குமாரை ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி பிரபு உத்தரவிட்டதால், அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Intro:கோவையில் சர்ச்சைக்குரிய வகையில் முகநூலில் பதிவு செய்ததாக திராவிடர் விடுதலை கழக நிர்வாகி நிர்மல் குமார் கைது
Body:திராவிடர் விடுதலை கழகத்தின் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் நிர்மல்குமார். இவர் கடந்த 13ம் தேதி மாட்டுக்கறி சாப்பிடுவது தொடர்பாகவும், இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் தொடர்பாகவும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை முகநூலில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து மணி என்பவர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து கோவை காட்டூர் காவல்துறையினர் இன்று நிர்மல் குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் முகநூலில் பதிவிட்டது அவர்தான் என்பது தெரியவந்த்தை தொடர்ந்து அவர் மீது இருபிரிவினரிடையே விரோதம் ஏற்படுத்தும் விதமான கருத்துகளை பகிர்தல் என்ற பிரிவின்
கீழ் வழக்கு பதிவு செய்து நிர்மல்குமாரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நிர்மல்குமாரை கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரபு முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தினர்.இதனையடுத்து நிர்மல்குமாரை வரும் ஆகஸ்ட் 9 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி பிரபு உத்திரவிட்டார்.இதனையடுத்து திராவிடர் விடுதலை கழக மாநகர் மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.Conclusion:
Last Updated : Jul 28, 2019, 8:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.