கோவை மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுபானம், கள்ளச்சாராயம் ஆகியவற்றிற்கு எதிராக விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளான குச்சிப்புடி, ஒயிலாட்டம், கரகாட்டம் ஆகியவை மூலம் கள்ளச்சாராயம், மதுபானம் போன்றவற்றை அருந்துவதன் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து பரப்புரை மேற்கொள்ளப்பட்டன.
மது அருந்துவதால் தூக்கமின்மை, வாந்தி, காச நோய், உயர் இரத்த அழுத்தம், இதய வீக்கம், மலட்டுத்தன்மை, கண்பார்வை மங்குதல், மூளை மற்றும் நரம்பு மண்டலம் செயலிழத்தல் போன்றவை ஏற்படுகிறது என்றும் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பரப்புரையானது இன்று தொடங்கி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் எனவும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொட்டது லாக்கர்; இருப்பது லாக்கப்..!