தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று, தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பிரசாரத்தை நிறைவு செய்வதற்காக குனியமுத்தூர் செல்லும் வழியில், அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினருக்கும் காயம்பட்டது. அப்போது பிரசார வாகனத்தில் இருந்தபடியே பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, வேண்டும் என்றே செய்யப்பட்ட இப்பிரச்சனையில், பெண் ஒருவரின் தங்கக் கம்மலை திமுகவினர் அபகரித்து சென்றுவிட்டதாக தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பினர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், நேற்றைய பிரசாரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் இருதரப்பிற்கும் கைகலப்பு ஏற்படுவதற்கு முன்னரே, கூட்டத்தில் பெண் ஒருவர் தனது கம்மலை பத்திரமாக கழற்றி வைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோவில் உள்ள பெண்ணின் கம்மலைத் தான் திமுகவினர் பிடுங்கி சென்றதாக அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோவை அடுத்து, வேண்டுமென்றே திட்டமிட்டு இதுபோன்று செய்யப்பட்டதா என திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: அமைச்சரின் வேட்புமனுவை தகுதி நீக்க முறையீடு!