சேலம் மாவட்டத்தை சேர்ந்த நடன ஆசிரியர் ஒருவர் கோவையில் தங்கி பணிபுரிந்து வந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த 16 வயது பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். இதுகுறித்து, பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனிடையே அந்த ஆசிரியர் கன்னியாகுமரி சென்று, அங்கும் ஒரு இளம்பெண்ணை அழைத்துக்கொண்டு தலைமறைவானார்.
அதன்படி கோயம்புத்தூர், கன்னியாகுமரி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில், ஆசிரியர் ஆந்திர மாநிலத்தில் பதுங்கியிருப்பதாக தகவல்கிடைத்தது. அதனடிப்படையில், தனிப்படை போலீசார் ஆந்திரா மாநிலம் விரைந்து, அவரை கைது செய்தனர். இளம்பெண்ணும், சிறுமியும் மீட்கப்பட்டனர்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஓய்வு பெற்ற ஆசிரியர் போக்சோவில் கைது