மருத்துவப் படிப்பில் தமிழ்நாடு அரசின் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் கோவையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
இதில் கோகுல் என்ற மாணவருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியிலும், தீபிகா என்ற மாணவிக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.
இவர்களுக்கு கோவை அசோகபுரம் பள்ளியில் வைத்து கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுகுட்டி மருத்துவக் கல்விக்காக இரண்டு லட்சம் காசோலையை வழங்கினார். மேலும் மருத்துவப் படிப்பில் ஏதேனும் தேவைப்பட்டாலும் தன்னை அணுகலாம் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்தச் சூழலில் மருத்துவப் படிப்பிற்குச் செலவாகும் என்று ஏழை மாணவர்கள் பலரும் மருத்துவக் கனவை கைவிடும் நிலையில் இதுபோன்று அரசியல் பிரமுகர்கள் உதவுவது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் - முதலமைச்சர்