கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 40 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. கரோனா ஊரடங்கு காரணமாக மூன்று மாதங்களாக நீதிமன்றம் மூடப்பட்டிருந்த நிலையில், சில தினங்களுக்கு முன் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறக்கப்பட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் காணொலி மூலம் நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாஸ்க் பரோட்டா 'கரோனா' தோசை - மதுரையை அசத்தும் 'டெம்பிள் சிட்டி'
புகார்களை அளிக்கவரும் பொதுமக்களும் முகக் கவசங்கள் அணியவேண்டும், கிருமிநாசினிகள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உடற்சூட்டைக் கண்டறியும் கருவி (தெர்மல் ஸ்கேனர்) மூலம் பரிசோதனை நடத்திய பின்பே நீதிமன்ற வளாகத்தினுள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இச்சூழலில், கோவை நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அந்த நீதிபதியுடன் பணியாற்றும் இரண்டு நீதிபதிகள் உள்பட பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, கோவை நீதிமன்ற வளாகம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு, மூன்று நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளன.