கோவை மாநகராட்சி பகுதியில் 100 வார்டுகளுக்கு கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (ஜூலை 27) கோவை தடாகம் சாலையில் உள்ள இடையர்பாளையம் வார்டில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையர் ஷர்வன் குமார் ஜடாவத் தொடங்கி வைத்தார்.
அப்போது மக்களிடம் அவர் பேசியதாவது, மக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசங்கள் அணிய வேண்டும், அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கைகளை நன்கு கழுவ வேண்டும், கட்டாயம் தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும், மருத்துவ முகாம்கள் நடைபெற்றால் தவறாமல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றார்.
மேலும், அனைத்து இடங்களிலும் தூய்மை பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.