சென்னையில் கோவை வந்த காந்திபுரம் கிராஸ்கட் சாலையை சேர்ந்த 4 பேருக்கும், தேனியில் இருந்து வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 35 வயது பெண்ணுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோல கரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த அன்னூரைச் சேர்ந்த 9 வயது சிறுவன் மற்றும் 25 வயது பெண்ணுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமுகை, காளப்பட்டி, வட சித்தூர், கரும்புக்கடை, வேலாண்டிபாளையம், செல்வபுரம், சூலேஸ்வரன்பட்டி, நடுப்புணி பகுதியைச் சேர்ந்த 8 பேருக்கும் மருத்துவ பரிசோதனையில் கரோனா உறுதியாகியுள்ளது.
இதனால், கோவை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களில் மட்டும் 100 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா தொற்று காரணமாக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 142 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும், கரோனா பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் சுகாதாரத் துறை அலுவலர்கள் கிருமிநாசினி உள்ளிட்டவற்றை தெளித்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.