கோவை: டிக்டாக் மூலம் ரவுடி பேபி சூர்யா எனப் பலராலும் அறியப்பட்ட சுப்புலட்சுமி மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர் ஆகிய இருவரும் ஆபாசமாகப் பேசி வலைத்தளங்களில் பதிவிடுவதாகவும் தங்களை மிரட்டுவதாகவும் கோவையைச் சேர்ந்தவர்கள் அளித்தப் புகாரின் பேரிலும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையிலும் இருவரும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திலகா தம்பதியினர், ரவுடி பேபி சூர்யா மீது புகார் அளித்ததை அடுத்து, ரவுடி பேபியின் ஆதரவாளர்கள் தங்களை மிரட்டுவதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, அவர்கள் கோவை மாவட்ட காவல்துறையில் புகார் மனு கொடுக்க வந்தனர்.
ஆதரவாளர்களின் மிரட்டல்
இதைத் தொடர்ந்து, அந்த தம்பதியினருக்கு ஆதரவாக லாரன்ஸ் சூர்யா என்ற மாற்றுத்திறனாளி (யூ-ட்யூபர்), தமிழ் ஆசிரியர் பெண் (யூ-ட்யூபர்) உட்பட சிலரும் சூர்யாவின் ஆதரவாளர்கள் தங்களையும் தொலைபேசி மூலமாகவும் யூ-ட்யூப் மூலமாகவும் தங்களுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், அவர்களது யூ-ட்யூப்பில் தங்களைப் பற்றி தரக்குறைவாகப் பதிவிடுவதாகவும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கோவை, திருப்பூர், மலேசியா ஆகிய இடங்களில் இருக்கும் ரவுடி பேபி சூர்யாவின் ஆதரவாளர்கள், யூ-ட்யூப் சேனல்களில் தங்களைப் பற்றி தவறுதலாகப் பதிவிடுவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காவிரி டெல்டாவில் மீண்டும் வரும் ஹைட்ரோகார்பன் அபாயம் - முதலமைச்சர் தடுக்க கோரிக்கை!