கோயம்புத்தூர் : ஆர்எஸ் புரத்தில் உருவாக்கப்பட்டு வரும்
ஹாக்கி மைதானத்தை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார் .
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவை மாநகராட்சியில் உள்ள விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தவும், புதிய கட்டுமானங்களை ஏற்படுத்தவும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஹாக்கி மைதானம்
ஆர்.எஸ்.புரத்தில் உலகத்தரத்தில் ஹாக்கி மைதானம் அமைப்பதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு விளையாட்டு வீரர்களை உருவாக்கி ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்வது முதலமைச்சரின் கனவுத் திட்டமாக உள்ளது. இதற்கான தொலைநோக்குத் திட்டம் தயார் நிலையில் இருக்கிறது.
25 லட்சம் இளைஞர்கள்
தமிழகத்தில் 25 லட்சம் இளைஞர்களை விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விளையாட்டு துறைக்கு வரும் புதிய இளைஞர்களை ஊக்குவித்து தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்படும். சென்னையில் ஸ்மார்ட் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. வருவாய் ஈட்டும் துறையாக விளையாட்டுத்துறை மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, நேரு விளையாட்டு அரங்கத்தை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மெய்யநாதன், 30 க்கும் மேற்பட்ட தடகள வீரர்களுக்கு நிவாரணங்களை வழங்கினார்.
இதையும் படிங்க :யூரோ 2020: அரையிறுதிக்கு முந்தப்போவது யார்?