ETV Bharat / city

ஆன்லைன் ரம்மியால் பணம் இழப்பு: துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு காவலர் தற்கொலை - ரம்மி விளையாட்டு

கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏராளமான பணத்தை இழந்ததால், மன அழுத்தத்தில் காளிமுத்து என்ற காவலர் துப்பாக்கியால் சுட்டுத்தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு காவலர் தற்கொலை

author img

By

Published : Jul 16, 2022, 2:58 PM IST

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறை துறைக்குச்சொந்தமான இடத்தில் அரசு பொருட்காட்சி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சியில் வேளாண்துறை கண்காட்சி, கால்நடைத்துறை கண்காட்சி மற்றும் கோவை மாநகர காவல் துறையின் கண்காட்சி என பல அரசு துறைகளின் கண்காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் கோவை மாநகர காவல் துறை கண்காட்சி அரங்கில் காளிமுத்து என்ற ஆயுதப்படை காவலர் நேற்று(ஜூலை.15) பணியில் இருந்துள்ளார்.

அப்போது திடீரென மாநகர காவல் துறை கண்காட்சி அரங்கில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காவலர் காளிமுத்து வயிறு மற்றும் முதுகு பகுதியில் ரத்த காயங்களுடன் அரங்கில் இருந்து வெளியே வந்துள்ளார். இதை கண்ட கண்காட்சியில் இருந்த ஊழியர்கள் காவலருக்கு குண்டடிப்பட்டது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த பந்தய சாலை போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த காவலர் காளிமுத்துவை கோவை பந்தய சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து சம்பவம் நடத்த இடத்தில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

அதேபோல தடவியல் போலீசாரும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் காவலர் கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதும்; ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சங்களை இழந்திருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த காவலர் காளிமுத்து இன்று(ஜூலை.16) அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்ட காவலர் ஒருவர் பல லட்சங்களை இழந்து கடன் தொல்லையால் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள்

இதையும் படிங்க: காதலி திருமணத்திற்கு சம்மதிக்காததால் மின்கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.