ETV Bharat / city

ஆ.ராசாவுக்கு மிரட்டல்...! கோவை பாஜக மாவட்ட தலைவர் கைது - பாஜக

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த புகாரில், கோவை பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை பீளமேடு காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆ.ராசாவை மிரட்டி பேசிய கோவை பாஜக மாவட்ட தலைவர் கைது

author img

By

Published : Sep 21, 2022, 11:42 AM IST

Updated : Sep 21, 2022, 1:44 PM IST

கோயம்புத்தூர்: பீளமேடு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது திமுகவினர் குறித்தும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா குறித்தும் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.

மேலும், ”போலீஸ் காவல் இல்லாமல் கோவை மாவட்டத்திற்குள் காலை வைத்துப் பாருங்கள்” என மிரட்டல் விடுக்கும் விதமாகவும், பெரியார் குறித்தும் அவதூறாக பேசியதாவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் அடிப்படையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் இன்று காலை பீளமேடு காவல்துறையினர் பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின் அவர் மீது கலகத்தை தூண்டுதல், வேண்டுமென்றே ஒரு நபரை அவமதித்து எரிச்சல் ஊட்டுதல் மற்றும் அவதூறு பரப்புதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

பாஜக மாவட்ட தலைவர் கைது செய்ததை அறிந்த கட்சி தொண்டர்கள் பீளமேடு காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர். இதனையடுத்து இரும்பு தடுப்புகள் அமைத்து அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். கைது செய்யப்பட்ட உத்தம ராமசாமியை உடல் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது காரை விடாமல் வழிமறித்து பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டனர். பீளமேடு காவல் நிலையம் முன் மறியலிலும் ஈடுபட்டனர்.

பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி அளித்த பேட்டி

இதையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு, உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட பாலாஜி உத்தமராமசாமி சிவராம் நகரில் உள்ள நீதிபதி செந்தில்ராஜா வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, பாலாஜி உத்தம ராமசாமி, “இது அதிகார துஷ்பிரயோகம், மாநில அரசின் அராஜக போக்கு. நீதித்துறை மீது நம்பிக்கை இருக்கிறது. சட்டம் மீது நம்பிக்கை இருக்கிறது. இதை சட்டபூர்வமாக எதிர்கொள்வோம்.

எனது கருத்தில் இருந்து ஒரு சதவீதம் கூட பின்வாங்க மாட்டேன். நான் சொன்னது உண்மை சத்தியம், என் தாய்மார்களையும், சகோதரிகளையும் பழித்து பேசியவன் யாராக இருந்தாலும் விடமாட்டேன். இதில் இருந்து மாற மாட்டேன்” என தெரிவித்தார். இதனையடுத்து பாலாஜி உத்தமராமசாமி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: கோவில்பட்டி அருகே 12ம் வகுப்பு மாணவி பள்ளி கழிவறையில் தற்கொலை...

Last Updated : Sep 21, 2022, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.