ETV Bharat / city

கோவை ஆர்ய வைத்திய சாலை தலைவர் பத்மஸ்ரீ கிருஷ்ணகுமார் உயிரிழப்பு! - அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைகழகம்

கோயம்புத்தூர்: ஆர்ய வைத்திய சாலை சிகிச்சை மையத்தின் தலைவரும், அவினாசி லிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பத்மஸ்ரீ கிருஷ்ணகுமார் நேற்று (செப் 16) உயிரிழந்தார்.

பத்மஸ்ரீ கிருஷ்ணகுமார் உயிரழப்பு
பத்மஸ்ரீ கிருஷ்ணகுமார் உயிரழப்பு
author img

By

Published : Sep 17, 2020, 7:42 AM IST

கேரளா மாநிலம் மற்றும் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் ஆர்ய வைத்திய சாலை, ஆராய்ச்சி மையம் நடத்தி வந்தவர், டாக்டர் கிருஷ்ணகுமார். கேரளாவில் ஆயுர்வேதம் படித்த இவர் பின்னர் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகள், கோவையில் சிகிச்சை மையங்களை நடத்தி வந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருதானது வழங்கப்பட்டது. மேலும் இவரது ஆயுர்வேத சேவைகளைப் பாராட்டி 2011ஆம் ஆண்டு இவருக்கு கௌரவ முனைவர் பட்டம், கர்நாடக மாநிலத்தில் உள்ள குவேம்பு பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது.

இவர் ஆர்ய வைத்திய பார்மஸியின் கிளைகளை பல்வேறு மாநிலங்களில் நிறுவி நடத்தி வந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் இவர் இருந்து வந்தார். 68 வயதான கிருஷ்ணகுமார் கடந்த சில நாட்களுக்கு முன் இதய பிரச்னைக்காக கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து கரோனா தொற்றுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (செப் 16) இரவு கிருஷ்ணகுமார் உயிரிழந்தார். இவரின் இறப்பிற்கு பிரதமர் மோடி உட்பட அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பத்மஸ்ரீ கிருஷ்ணகுமார் பிரதமருக்கும், பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்களுக்கும் நெருக்கமானவர். பிரபல அரசியல் தலைவர்கள் பலர் இவரிடம் ஆயுர்வேத சிகிச்சைப் பெற்றுவந்தனர்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் அடிக்கடி கிருஷ்ணகுமாரிடம் சிகிச்சை பெறுவதற்காக ஆர்ய வைத்திய பார்மஸி மருத்துவமனைக்கு வந்து செல்வது குறிப்பிடத்தக்கது. கரோனா தொற்று காரணமாக இவர் உயிரிழந்து இருப்பதால், விதிமுறைகளின்படி அடக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவையில் இன்று 549 பேருக்கு கரோனா உறுதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.