நீலகிரி: கோயம்புத்தூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களான முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா ராவத் மற்றும் உயிரிழந்த இராணுவ வீரர்கள் ஆகியோரின் உடல்கள் வெலிங்டன் சதுக்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.
இந்நிலையில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட உயிரிழந்த வீரர்களின் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
இந்திய ராணுவத் தளபதி, ராணுவ உயர் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சலிக்கு பின்னர் 13 பேரின் உடல்களை ராணுவ வாகனங்கள் மூலம் சூலூர் விமானப்படைத் தளத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறது. அங்கிருந்து தனி விமானம் மூலம் 13 பேரின் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது. முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு நீலகிரி வந்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.