ETV Bharat / city

வழிநெடுகில் காத்திருந்த மக்களிடம் காரை நிறுத்தி மனு பெற்ற ஸ்டாலின் - cm mk Stalin stops the car to receive petition

கோவை: காரில் சென்று கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், அவ்வழியில் காத்திருந்த பொதுமக்களிடம் காரை நிறுத்தி மனுக்கள் வாங்கி விட்டு கடந்துச் சென்றார்.

காரை நிறுத்தி மக்களிடம்  மனுக்களை பெற்ற ஸ்டாலின்

author img

By

Published : May 30, 2021, 9:11 PM IST

கரோனா தடுப்பு பணிகளை பார்வையிட கோவைக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின் இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் இஎஸ்ஐ மருத்துவமனையை ஒட்டியிருக்கும் பாரதிநகர் மக்கள் முதலமைச்சரிடம் புகாரளிக்க காத்திருந்தனர். அவர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்த முயன்றதால் அங்கிருந்த பெண்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது மருத்துவமனை ஆய்வை முடித்து விட்டு முதலமைச்சர் காரில் வெளியே வந்தார். இதையடுத்து காரை நிறுத்தி அங்கிருந்த பெண்களிடம் மனுவை வாங்கிச்சென்றார்.

இஎஸ்ஐ மருத்துவமனையை சுற்றி இருக்கும் பாரதி நகரில் மாநகராட்சியினர் குப்பைகளை எடுப்பதில்லை, கிருமி நாசினி தெளிப்பதில்லை எனவும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் இருந்து தங்கள் பகுதிக்கு வந்து செல்வதாகவும் புகார் தெரிவித்தனர்.

காரை நிறுத்தி மக்களிடம் மனுக்களை பெற்ற ஸ்டாலின்

மேலும் இதனால் குழந்தைகள், பெரியவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் இது குறித்து மருத்துவமனை நிர்வாகமும் , மாநகராட்சியும் கண்டு கொள்வதில்லை என்றும் குற்றஞ்சாட்டினர். முதலமைச்சர் மனுவை பெற்றுக்கொண்டு இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து விட்டு கடந்துச் சென்றார்.

இதையும் படிங்க; 'பாலியல் புகார்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பேற்பாரா?': எல்.முருகன் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.