இந்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் பாரம்பரிய தொழில்கள் மேம்பாட்டு திட்டம் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் தொழில் மேம்பாட்டுக்கு அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் கைது தொழில் சார்ந்த கைவினைக் கலைஞர்கள் குடும்ப முறையில் ஒருங்கிணைந்து அவர்களின் மேம்பாட்டுக்கு உதவி செய்துவருகிறது.
தமிழ்நாட்டில் பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, ஈத்தாமொழி, சேலம், தருமபுரி பகுதிகளில் தேங்காய் நார், கயிறு சார்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட பல்வேறு பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதற்கான தொழில் மேம்பாட்டிற்கான பொது வசதி மையம் அமைக்கக் கட்டடம், நவீன இயந்திரங்கள், தளவாடங்கள் அமைக்க அரசு உதவி செய்துவருவதாகவும், மத்திய அமைச்சர்களால் தொடங்கிவைக்கப்பட்ட ஏழு குடும்பங்களின் திட்ட செலவு ரூபாய் 29. 22 கோடி எனவும் திட்டங்களுக்கான இந்திய அரசு உதவி ரூபாய் 21. 11 கோடி ஆகும்.
அந்த மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் இணை அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி முன்னிலையில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சர் நிதின் கட்காரி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் 14 லட்சத்து 710 கயிறு தொழிலாளர்கள் பயனடைவார்கள். மேலும் புதிய வேலைவாய்ப்புத் திட்டங்கள் உருவாகும் எனத் தெரிவித்தனர். இதில் பூபாலன் மண்டல அலுவலர், கூட்டு குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.