கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை, காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன் (18). இவர் கோவைப்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. ஐ.டி. முதலாம் ஆண்டு படித்துவந்தார்.
இதனிடையே, இவர் அக்.10ஆம் தேதி இரவு தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு படுக்கைக்கு அருகில் வைத்துள்ளார். பின்னர் அப்படியே தூங்கியுள்ளார். இதையடுத்து அதிகாலையில் செல்போன் வெப்பமடைந்து வெடித்துள்ளது.
இதில் ஏற்பட்ட தீ, சிவராமின் படுக்கை வரை பரவியதில் அவருக்கு உடலில் பல்வேறு பகுதிகளில் தீக்காயங்கள் ஏற்பட்டன. இதனை அறிந்த சக மாணவர்கள், அவரை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏழு நாள்களுக்கும் மேல் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் இன்று உயிரிழந்தார். நீண்ட மணி நேரம் சார்ஜ் போடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: உணவு டெலிவரி செய்ய வந்தவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பைக், செல்போன் பறிப்பு!