கோயம்புத்தூர்: தடாகம் சாலை கே.என்.ஜி. புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கிற்கு நேற்று (பிப்ரவரி 6) இரவு 10 மணியளவில் பைக்கில் வந்த இளைஞர்கள் இருவர் ரூ. 800-க்கு பெட்ரோல் போட்டுள்ளனர்.
இதையடுத்து பங்க் ஊழியர் பிரபாகரன் பெட்ரோலுக்குப் பணம் கொடுக்கும்படி கேட்டபோது இளைஞர்கள் இருவரும் பணம் கொடுக்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
உடனடியாக பிரபாகரன் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞரின் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளார்.
ஆனால் அவர் நிலைதடுமாறி அருகிலிருந்த தடுப்பில் மோதி விழுந்ததால் இளஞர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்து பங்க் ஊழியர் அளித்த புகாரின்பேரில் துடியலூர் காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: வெள்ளி படிச்சட்டத்தை திருடிய அர்ச்சகர்கள் - திடுக்கிடும் வாக்குமூலம்