மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு கட்சியினரும் விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக டெல்லியில் பல நாட்களாக விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் உள்ள ரிலையன்ஸ் கடைகளை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று (டிசம்பர் 14) முற்றுகையிட்டனர்.
கோயம்புத்தூர் புரூக் பீல்டு வணிக வளாகத்தில் உள்ள ரிலையன்ஸ் கடையை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு மத்திய அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.